Sunday, August 02, 2009

புதுக்கோட்டை

The Wikimedia Board of Trustees election has started. Please vote.
[ஒளி]
[மொழிபெயர்க்க உங்களது உதவி தேவை!]
தமிழ் விக்கிமேற்கோள், தமிழ் விக்கிசெய்திகள் திட்டங்கள் தொடர வாக்களியுங்கள்.

புதுப் பயனர்களுக்கான உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | தமிழ் அகரமுதலி

புதுக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதுக்கோட்டை

புதுக்கோட்டை
அமைவிடம் 10.38° N 78.82° E
பரப்பளவு {{{பரப்பளவு}}} கிமீ²
கால வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை
- மக்களடர்த்தி
108,947
-


புதுக்கோட்டை (ஆங்கிலம்:Pudukkottai), இந்திய மாநிலமான தமிழ் நாட்டிலுள்ள ஒரு நகரம் ஆகும். புதுக்கோட்டை 1974ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் நாள் மாவட்டமாக மலர்ந்தது. இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் ஒரு வருவாய் கோட்டமாக இருந்தது. தொண்டைமான் மன்னர்களின் முடியாட்சியில் இருந்த புதுக்கோட்டைத் தனியரசு(சமஸ்தானம்) 3.3.1948ல் ஒன்றுபட்ட இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, குண்டாறு, பாம்பாறு, அஞ்ஞான விமோச்சனியாறு, உய்யங்கொண்டான், அம்புலியாறு, கோரையாறு, சூறையாறு முதலிய காட்டாறுகள் ஓடுகின்றன. பெரும் மழைக்காலங்களில் மாடுமே இவற்றில் தண்ணீர் ஓடும். மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கருங்கல் குன்றுகள் 'மலைகள்' என்று அழைக்கப்படுகின்றன. பல ஊர்கள் மலை என்ற அடைமொழியுடன் விளங்குகின்றன - குடுமியான்மலை, நார்த்தாமலை, விராலிமலை, தேனிமலை, பிரான்மலை இந்த குன்றுகளில் தாவரவளம் மிகவும் குறைவு. மாவட்டத்தில் மிக உயரமான குன்று பிரான்மலையில் உள்ளதாகும்.

நார்த்தாமலையில் பரந்து காணப்படும் குன்றுகளில் நல்ல வகைக் கருங்கல் கிடைக்கிறது. செவலூர், அம்மா சமுத்திரம், குன்னத்தூர் மலை, செம்பாட்டூர், விராலிமலை, நெடுங்குடி, குடுமியான்மலை, திருக்கோகர்ணம், வையாபுரி, குமரமலை, குன்னாண்டார்கோவில், மலையடிப்பட்டி, அரிமளம், திருமயம், சித்தன்னவாசல் ஆகிய இடங்களிலும் சிறிய கருங்கல் குன்றுகள் உள்ளன. நார்த்தாமலையில் உள்ள சிறு குன்றுகளில் பலவகையான மூலிகைச் செடிகள் காணப்படுகின்றன.

பொருளடக்கம்

[மறை]

[தொகு] வரலாற்றுக்கு முற்பட்டக் காலம்

ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன.

இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் கி.மு 600 வரை போகட்டும் என்றூ கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது.

"மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271)

"மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44)

"கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம்.

"சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகாள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலக்கட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலக்கட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன.

[தொகு] பிராமிக் கல்வெட்டு

பிராமி (தமிழ்) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் கி.மு 200 முதல் கி.பி 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது.

"எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்"

என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில்(அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது).

சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன.

[தொகு] சங்ககாலம்

சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குறியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு கி.பி முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும்.

"தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமில் பன்னிரு நாடென்"

என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்குசோழர் காலக்கல்வெட்டு இதனன உறுதிப்படுத்துகிறது. தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச்

பன்றிநாடானது கோனாடு, கானாடு ன இரு பெரும் பிரிவுகளாக விளங்கியத். இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தத். வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்று, தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் வழங்கியது. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71வது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25வது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247வது பாடல் இவள் பாடியதாகும்.

சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்றூ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

[தொகு] புதுக்கோட்டையில் ரோமாபுரி

திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. கி.பி முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு முத்து மணிவகைகள் பருத்தி பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன.

புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும் பட்டு மெந்துகிலும் நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டட வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் கி.மு 29க்கும் கி.பி 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது(செலவாணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.)

இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம்,

மன்னர்கள்
அகஸ்டஸ் சீசர் (கி.மு 29 - கி.பி 14)
டைபீரியஸ் சீசர் (கி.பி 14 - கி.பி 27)
நீரோ ட்ரூசஸ்(கி.மு 38 - கி.பி 9)
அந்தோனியா(ட்ரூசஸ் மனைவி)
ஜெர்மானிக்கஸ்
அக்ரிபின்னா(ஜெர்மானிக்ஸ் மனைவி)
காலிகுலா(கி.பி 37 - 41)
டைபிரியஸ் க்ளாடியஸ் (கி.பி 41 - 54)
நீரோ (கி.பி 54 - 68)
வெஸ்பாசியானஸ்(கி.பி 69 - கிபி 79)

நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை சென்னை புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

[தொகு] களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)

சங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர, சோழ, பாண்டியரை களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.

ஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.

களப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ முழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.

பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.

[தொகு] முதல் பாண்டியப் பேரரசு

கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகப் பகுதி களப்பிரரின் ஆளுகையின் கீழ் இருந்தது. அவர்களிடமிருந்து பாண்டியன் கடுங்கோன் பாண்டி நாட்டைப் பகுதிகளைக் கைப்பற்றினான். பாண்டியன் நெடுஞ்சடையனின் வேள்விக்குடி செப்பேடு இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது. கடுங்கோன் கி.பி 590 முதல் 620 வரை ஆட்சி செய்தான். ஏறத்தாழ இதே காலத்தில் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணு(கி.பி 575 - 600) தொண்டை மண்டலத்தில் களப்பிரரை வென்று அங்கு பல்லவர் ஆட்சியை ஏற்படுத்தினான். புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன்(கி.பி 710 - 740), மாறன் சடையன்(கி.பி 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன்(கி.பி 862 - 880)சோழர்பல்லவர் கை ஓங்கியிருந்தது. சோழ பல்லவ படையினரிடம் இவன் திருப்புரம்பிய போரில் தோற்றுப் போனான். வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. வரகுணவர்மனின் ஆட்சியின் காலத்தில் மற்றும்

தொடர்ந்து பராந்தக வீர நாராயணனும்(கி.பி 880 - 900) மாறவர்மன் ராஜசிம்மனும்(கி.பி 900 - 920) ஆட்சி செய்தனர். இவர்களது காலத்தில் பாண்டிய அரசு மெல்ல மெல்ல சோழர்களின் ஆளுகைக்குட்பட்டது. முதல் பாண்டிய பேரரசின் கடைசி மன்னன் வீரபாண்டியன்(கி.பி 946 - 966) ஆவான், இவன் இரண்டாம் ஆதித்த சோழனால் முறியடிக்கப்பட்டான், முதலாம் பாண்டிய பேரரசு முடிவுக்கு வந்தது.

[தொகு] பல்லவர்

தொண்டை மண்டலத்தில் கி.பி 575 வாக்கில் பல்லவரின் ஆட்சியை நிறுவிய சிம்மவிஷ்ணு பரம்பரையினருக்கும் முதலாம் பாண்டியப் பேரரசை சேர்ந்த பாண்டியர்களுக்கும் அரசுரிமைக் குறித்த ஆதிக்கப்போர்கள் நடந்து கொண்டேயிருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டு முடிவில் காவிரிக் கரையின் வடக்குப் பகுதிவரை பல்லவப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது. ஆனால் புதுக்கோட்டைப் பகுதியில் கி.பி 8ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின்(கி.பி 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

தந்திவர்மன்(கி.பி 775 - 826), நிருபதுங்கவர்மன்(கி.பி 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.

[தொகு] முத்தரையர்

தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன.

முற்காலத்தில் பெருநிலக் கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டைபல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். முத்தரையரின் தோற்றுவாய் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு உண்டு. முத்தரையர் களப்பிரர்களின் பகுதிகளில் கிளைக்குடியினர் என்று டாக்டர் எஸ்.கே. அய்யங்கார் போன்ற அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் களப்பிரர் என்ற சொல்லில் இருந்து முத்தரையர் என்ற சொல் எப்படிவந்தது என்று தெரியவில்லை. தமிழகத்தின் கலை, கலாச்சாரம், சமய சடங்குகள், பண்பாடு அனைத்தையும் நிலைகுலையச் செய்த களப்பிரரையும் கலக் காவலர்களாக காட்சியளிக்கும் முத்தரையரையும் தொடர்பு படுத்த முடியாது. முத்தரையர் என்பவர் பல்லவரே என வேங்கடசாமி நாட்டாரும், கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று ராகவ அய்யங்காரும் கூறுகின்றனர்.

முத்தரையர் ஆரம்ப காலத்தில் பாண்டி நாட்டு முத்துக்குளிக்கும் துறைமுகப் பகுதிகளில் ஆட்சி செய்திருக்க வேண்டும். முத்து + அரையர் = முத்தரையர்(அரையர் என்றால் நாடாள்வோர் என்று பொருள். முத்தரையர், மாறன், மீனவன், தென்னவன் போன்ற பாண்டியரின் பெயர்களைப் பெற்றிருந்த செய்தியை புதுக்கோட்டை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செந்தலைக் கல்வெட்டில் முத்தரையரின் கொடிச் சின்னம் 'கயல்' எனக் காணப்படுகிறது. மேற்கண்ட கருத்துக்களை கூர்ந்து ஆராயும் பொழுது முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினராக இருந்திருக்க வ்ஏண்டும். இவர்கள் கொடும்பாளூர் வேளிருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்களாகவும் இருக்க வேண்டும். முத்தரையர் பாண்டியரின் கிளைக்குடியினர் ஆயினும், இவர்கள் பல்லவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்து பாண்டியரை எதிர்த்துப் போரிட்டிருக்கின்றனர்.

பிற்கால சோழர் பேரரசு

கொடும்பாளூர் வேளிர்

சாளுக்கிய சோழர்

இரண்டாவது பாண்டியப் பேரரசு

பாண்டிய நாட்டில் கலகம்

புதுக்கோட்டையில் மாலிக்காபூர்

பாண்டியப் பேரரசின் வீழ்ச்சி

விஜயநகர ஆட்சி



தமிழ்நாட்டு முத்திரை தமிழ்நாடு


தமிழ்நாடு தொடர்பான தலைப்புகள் | வரலாறு | அரசியல் | தமிழர்

தலைநகரம் சென்னை
மாவட்டங்கள் அரியலூர் • ஈரோடு • கடலூர் • கரூர் • கன்னியாகுமரி •

காஞ்சிபுரம் • கிருஷ்ணகிரி • கோயம்புத்தூர் • சிவகங்கை • சென்னை • சேலம் • தஞ்சாவூர் • தர்மபுரி • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவள்ளூர் • திருவாரூர் • தூத்துக்குடி • தேனி • நாகப்பட்டினம் • நாமக்கல் • நீலகிரி • புதுக்கோட்டை • பெரம்பலூர் • மதுரை • இராமநாதபுரம் • விருதுநகர் • விழுப்புரம் • வேலூர்

முக்கிய நகரங்கள் அம்பத்தூர் • ஆலந்தூர் • ஆவடி • ஈரோடு • கடலூர் • காஞ்சிபுரம் • கும்பகோணம் • கோயம்புத்தூர் • சென்னை • மதுரை • சேலம் • தஞ்சாவூர்மயிலாடுதுறை• தாம்பரம் • திண்டுக்கல் • திருச்சிராப்பள்ளி • திருநெல்வேலி • திருப்பூர் • திருவண்ணாமலை • திருவொற்றியூர் • தூத்துக்குடி • நாகர்கோயில் • நெய்வேலி • பல்லாவரம் • புளியங்குடி • தென்காசி • •

சங்கரன்கோவில் •அம்பாசமுத்திரம் •பாளையங்கோட்டை •நான்குனேரிவள்ளியூர் •கடையநல்லூர் • •

இராஜபாளையம் • வேலூர்
பா • உ • தொ
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

Thursday, April 23, 2009

தமிழ் அருவி










வாழ்க தமிழ் ! வழர்க தமிழர்

Tuesday, March 31, 2009

செய்திகள்
தமிழ்ச் செய்திகளின் இணையம்.www.puthinam.com/ - 52k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
இலங்கை, ஈழச் செய்திகள்
28 Mar 2009 ... இலங்கை செய்திகள்,இந்திய செய்திகள்,ஈழச்செய்திகள்,சினிமா செய்திகள். ... சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் இனப் படுகொலையை ...www.tamilskynews.com/ - 126k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
ஈழச் செய்திகள் தமிழ்
தேடல் முடிவுகள்: ( 1-10 ) ஈழச் செய்திகள் தமிழ் குறித்த 15 கோப்புகளை ... இணையசெய்திகள் ் ் தமிழ் சஞ்சிகைகள் ு வீடியோ செய்திகள் ஆடியோ ...search.webdunia.com/.../ஈழச்-செய்திகள்... - 41k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
தமிழ் ஈழச் செய்திகள்
தேடல் முடிவுகள்: ( 1-10 ) தமிழ் ஈழச் செய்திகள் குறித்த 14 கோப்புகளை ... இணையசெய்திகள் ் ் தமிழ் சஞ்சிகைகள் ு வீடியோ செய்திகள் ஆடியோ ...search.webdunia.com/.../தமிழ்-ஈழச்-செய... - 41k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்search.webdunia.com தரும் கூடுதல் முடிவுகள் »
Google வலைப்பட்டியல் - World > Tamil ...
தொடர்கள், அரசியல், மற்றும் மசாலா மிக்ஸ். தமிழ் ஈழச் செய்திகள் - http://www.puthinam.com தமிழ் ஈழச் செய்திகள். முழக்கம் - http://www.muzhakkam.com/ ...www.google.com/.../செய்திகள்/இதழ்க... - 42k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
My Language : தமிழ்
தமிழ்ச் செய்திகள்: யூனித்தமிழில் வெளியாகும் இணையச் செய்தி இதழ். தமிழ் ஈழச் செய்திகள்: தமிழ் ஈழச் செய்திகள். ...www.mylanguage.gov.au/ta/938999 - 23k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
Open Directory - World: Tamil: செய்திகள்: இதழ்கள் ...
தமிழ் ஈழச் செய்திகள் - தமிழ் ஈழச் செய்திகள். தமிழ் சினி டைரக்டரி - தமிழ்த் திரைப்படச் செய்திகள். தமிழ் மண் - இலக்கிய இதழ். ...www.dmoz.org/.../செய்திகள்/இதழ்கள... - 28k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
ODP Katalog World Tamil செய்திகள் ...
ஆறாம் திணை - இணைய தமிழ் இதழ். செய்திகள், சிறுகதை, நேர்காணல், பழமொழி, தலையங்கம். இலங்கை, ஈழச் செய்திகள் - இலங்கை, ஈழச் செய்திகள். ...www.w3c-at.org/odp/?inc.../செய்திகள்/... - 27k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
FinQoo Directory » World » Tamil » செய்திகள் ...
தமிழ் ஈழச் செய்திகள் - தமிழ் ஈழச் செய்திகள். ... Tamil Canadian:Tamil Eelam News - தமிழ் ஈழச் செய்திகளும், கட்டுரைகளும். ...directory.finqoo.com/?World/.../செய்திகள்/... - 45k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
Eweb7 - /World/Tamil/செய்திகள் ...
ஆறாம் திணை - இணைய தமிழ் இதழ். செய்திகள், சிறுகதை, நேர்காணல், பழமொழி, தலையங்கம். இலங்கை, ஈழச் செய்திகள் - இலங்கை, ஈழச் செய்திகள். ...eweb7.com/directory.pl?dir=/.../செய்திகள்/... - 24k - தற்காலிக சேமிப்பில் - இதைப் போன்ற பக்கங்கள்
அகரமுதலி (அகராதி)
A Tamil - English Dictionary - ( தமிழ் - ஆங்கில அகரமுதலி)
About Me
Name: சிவக்குமார் (Sivakumar)
View my complete profile

ஓடு - run
நீர் நிலைகள்
வளை - To bend
குறு - short, dwarfish, defective
கொள் - to seize, get, acquire; to buy
அரசன் - king
மிகு - to exceed, surpass, be in excess, grow
எழு - to rise, ascend
திரள் - to become round, globular, assemble, congr...
பெண் - Woman

September 2005
October 2005
March 2006
April 2006
May 2006
October 2008
December 2008
March 2009




dog rampsThis is a paragraph of text that could go in the sidebar.
-->
Thursday, March 19, 2009

ஓடு - run
ஓடு - run (verb)ஓட்டம் - runningஓட்டி - தேரோட்டி - driverஓடல் - runஓடை - ஓடும் நீர் - streamஓடம் - ஓடும் கலம் - boat
Labels:
button="vert";
submit_url =""
posted by சிவக்குமார் (Sivakumar) 11:05 AM 0 comments
Thursday, December 04, 2008

நீர் நிலைகள்
கடல் - seaஏரி - lakeகுளம் - pondகுட்டை - small pondகண்மாய் - ஏந்தல் - தாங்கல் -
button="vert";
submit_url =""
posted by சிவக்குமார் (Sivakumar) 10:05 AM 1 comments
Wednesday, October 29, 2008

வளை - To bend
வளை - bendவளையல் - bangleவளையம் - ringவளைகரம் - பெண்ணின் கரம் - Woman's hand (Who wears Bangles)வளையாமாரி - சோம்பேறி - Lazy personகுரள்வளை - வளைந்த குரல் தோன்றும் தொண்டைப் பகுதி - ளகரம் ணகரமாதல் (காட்டு:வெள்ளை - வெண்மை, திரள் - திரண்ட - திரட்சி, மருள் - மருண்ட - மருட்சி, இருள் - இருண்ட - இருட்டு)வணக்கம் - உடலை வளைத்து வணங்குதல் - worship (noun)வணங்கு - உடலை வளைத்து வணங்கு - worship (verb)வணக்கு - வளைத்தல் (காய்களை வணக்குதல் - சூட்டினால் இளக்கி வளைத்தல்) வணங்காமுடி - வளையாத முடி அல்லது யாருக்கும் வளைந்து கொடுக்காதவன்(ள்)வண்டி - வளைந்த சக்கரங்களுடைய ஊர்தி - vehicleவண்டு - வளைந்த உடலுடையை பூச்சி - beetleவட்டம் - வளைவான வடிவம் - circleவட்டு - disk
Labels:
button="vert";
submit_url =""
posted by சிவக்குமார் (Sivakumar) 6:30 AM 0 comments
Tuesday, May 30, 2006

குறு - short, dwarfish, defective
குறுமை - shortness, dwarfishness, defectivenessகுறுகு - to grow short, stumpyகுறுக்கு - to shorten, reduce, abbreviateகுறுக்கம் - shortnessகுறை - to diminish, dwindle, defectகுறைச்சல் - deficiency, scarcityகுறைவு - ack, deficiency, defect, small quantityகுறில் - shortness, dwarfishnessகுற்றம் - fault, defectகுன்று - diminish (322)
Labels:
button="vert";
submit_url =""
posted by சிவக்குமார் (Sivakumar) 9:35 AM 6 comments
Tuesday, May 02, 2006

கொள் - to seize, get, acquire; to buy
கொள்கை - taking, accepting, opinion, doctrineகொள்வோன் - buyer, studentகொள்வோர் - buyers, learnersகொள்ளை - robbery, plunder கொண்டு வருதல் - bringing (வெள்ளை வெண்மை ஆவது போல் கொள்-கொண் என ஆகும், காட்டு:நீள் (நீளம்) - நீண் (நீண்ட) )(312)
Labels:
button="vert";
submit_url =""
posted by சிவக்குமார் (Sivakumar) 8:30 AM 2 comments
Tuesday, April 18, 2006

அரசன் - king
அரசு - king, sovereign, princeஅரசன் - kingஅரசி - queenஅரசியல் - politicsஅரண்மனை - palaceஅரண் - fortress, castle (307)
Labels:
button="vert";
submit_url =""
posted by சிவக்குமார் (Sivakumar) 8:57 AM 0 comments
Tuesday, April 11, 2006

மிகு - to exceed, surpass, be in excess, grow
மிகுத்து - to save, spareமிக்க - great, much, excellentமிக்கது - that which is abundant or excessiveமிக்கார் - great persons, superior personsமிக்கோன் - great personமிகுதம் - abundance, profusionமிகுதி - much, abundance, fullnessமிகுந்த - much, greatமிகை - abundance, excessமீப்பு - abundance, excellenceமீதி - remainder, that which is left (301)
Labels:
button="vert";
submit_url =""
posted by சிவக்குமார் (Sivakumar) 9:29 AM 0 comments

Sunday, February 15, 2009


சர்வதேச சமுதாயம் கண் மூடிபார்க்கும் அவலம்


என் தமிழன்